ரோசய்யா மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 4, 2021

ரோசய்யா மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!

ரோசய்யா மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். ரோசய்யா உடல்நிலை பாதிக்கப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் . கொனியேட்டி ரோசையா எனும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். 

இவரது மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். 
அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.திரு.ரோசய்யா அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad