ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 8, 2021

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை?

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை?

ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். பயணித்த 11 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்னும் 3 பேரை மீட்க வேண்டியுள்ளது. 7 பேர் மரணித்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 2 பேர் உடல் 80% தீக்காயங்களுடன் சிதைந்துள்ளது என கூறப்பட்ட நிலையில் இவர்கள் தான் உயிரிழந்ததா என தெரியவில்லை.
ஆனால், ஹெலிகாப்டர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் மற்றும் காயமடைந்தார்கள் என்ற விவரங்களை இராணுவமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad