இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை! – நாகலாந்து சம்பவம் குறித்து ராகுல்காந்தி!
நாகலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
நாகலாந்து
மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் 13 பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறுத்து பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “நாகலாந்து துப்பாக்கிசூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தை நெருடுகிறது. இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை. பாதுகாப்பு படையும் பாதுகாப்பாக இல்லை. உள்துறை என்னதான் செய்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment