அவரு மாநாட்டு மன்னன்.. கே.என்.நேருவை புகழ்ந்த அன்பில் மகேஷ்
கே.என்.நேரு மாநாட்டு மன்னன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், பொன்முடி, இரகுபதி, பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதல்வர் ஸ்டாலின் நேற்று விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து, தஞ்சையில் இருந்து திருச்சி வந்தபோதும் வண்டியை நிறுத்தி நிறுத்தி ஆர்வத்துடன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றதை பார்த்து பூரிப்படைந்தோம்.
நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் வருகிறார் என்று சொன்னவுடன், அப்படி சொல்லாதீர்கள், எங்கள் மூத்த பிள்ளை உதவிக்கரம் நீட்ட வருகிறது என்று சொல்லுங்கள், தங்கைகளுக்கு சீர் செய்ய அண்ணன் வருகிறார் என்று சொல்லுங்கள் என பொதுமக்கள் சொன்னது முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி.
ஒருமுறை வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்த்துவிட்டு சென்றேன். திரும்ப வந்து பந்தல் ஏற்பாடுகளை பாருப்பா என அமைச்சர் கே.என்.நேரு இரண்டு முறை கேட்டுக்கொண்டார். யாருடைய ஏற்பாட்டை யார் பார்வையிடுவது? அவரே மாநாட்டு மன்னன்” என்று புகழ்ந்து பேசினார்.
No comments:
Post a Comment