பள்ளி மாணவனை பிடித்து சிறுமிக்கு தாலிகட்ட சொன்ன கிராம மக்கள்.. நடந்தது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

பள்ளி மாணவனை பிடித்து சிறுமிக்கு தாலிகட்ட சொன்ன கிராம மக்கள்.. நடந்தது என்ன?

பள்ளி மாணவனை பிடித்து சிறுமிக்கு தாலிகட்ட சொன்ன கிராம மக்கள்.. நடந்தது என்ன?




பள்ளியில் படிக்கும் மாணவனும் மாணவியும் காதலித்து வந்த நிலையில் இவரும் சந்தித்த போது கையும் களவுமாக பிடித்தவர்கள் அவர்களை கட்டயபடுத்தி திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த முழு தகவல்களை கீழே காணலாம்.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் தன் காதலியை பார்க்க போய் சிக்கலில் மாட்டிய சம்பவம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது.

பீகார் மாநிலத்தில் சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளான். சிறு வயதிலேயே இவர்கள் காதல் என்ற பெயரில் ஒன்றாக சேர்ந்து வெளியே சுற்றுவது, உள்ளிட்ட பல விஷயங்களை செய்துள்ளனர். அவ்வப்போது இவர்கள் சுற்றுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் அந்த பள்ளி சிறுவன் தனது காதலியை நேரில் சந்தித்துள்ளான். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை கூட்டி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். இதனால் பயந்துபோன இருவரும் அழுது கதறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தும் திருமணத்திற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. ஆனாலும் வல்லு கட்டாயமாக இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க கிராம மக்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் அவர்களிடமிருந்து தங்கள் குழந்தைகளை மீட்டு வீட்டிற்கு சென்றதோடு இப்படியாக குழந்தைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார் போலீசார் இது குறித்து விசாரித்து குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க முயன்றவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

No comments:

Post a Comment

Post Top Ad