மோடியே மாஸ்க் போடல.. நானும் போடல.. சஞ்சய் ராவத் பளீச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

மோடியே மாஸ்க் போடல.. நானும் போடல.. சஞ்சய் ராவத் பளீச்!

மோடியே மாஸ்க் போடல.. நானும் போடல.. சஞ்சய் ராவத் பளீச்!



பிரதமர் மோடி மாஸ்க் போடாததால் தானும் மாஸ்க் போடவில்லை என சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத் கேலி செய்துள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அரசு, சுகாதார வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில், பிரதமரே மாஸ்க் போடாததால் தானும் மாஸ்க் போடவில்லை என சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத் கலாய்த்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சஞ்சய் ராவத் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, சஞ்சய் ராவத் ஏன் மாஸ்க் அணியவில்லை என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், “எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே மாஸ்க் அணிவதில்லை.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மாஸ்க் அணிகிறார். ஆனால் மோடி நாட்டின் தலைவர். நான் பிரதமரை பின் தொடருகிறேன். எனவே நான் மாஸ்க் அணிவதில்லை. மக்களும் மாஸ்க் அணிவதில்லை.

சுப்ரியா சூலே, சதானந்த் சூலே, பிரஜக்த் தன்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகிய எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எல்லோரும் மிக கவனமாக இருக்க வேண்டும். ” என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad