அடையாளம் காணப்படாத உடல்கள்: இந்திய ராணுவம் தகவல்!
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல்.
கோவை சூலூர் விமானப்பட
ை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு எஞ்சிய வீரர்களின் உடல்கள் அடையாளம் காண தேவையான அனைத்து வகையான
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் தகவல்.
No comments:
Post a Comment