மீண்டும் முழு ஊரடங்கு - அரசு திடீர் விளக்கத்தால் பரபரப்பு!
முழு ஊரடங்கு குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று, இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரஸ் தொற்று, டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என்றும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து ஒமைக்ரான் தாக்குவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கோரத் தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், ஒமைக்ரான் வைரஸ் புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி பதில் அளித்ததாவது:
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் விரும்பவில்லை. அதற்கு பதிலாக முடிந்தவரை அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தற்போதைக்கு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment