முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் பொருளாதார நிலைமையை வலுப்படுத்த மேற்கொள்ள மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் உள்பட பொருளாதார வல்லுநர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். சமீபத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது என்பதும் அந்த குழுவின் உறுப்பினராக ரகுராம்ராஜன் இணைக்கப்பட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பொருளாதார நிலையை வலுப்படுத்துவது, நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவது, நிதி ஆதாரத்தை அதிகப்படுத்துவது ஆகியவை குறித்து முதல்வருடன் ரகுராம் ராஜன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment