ஒமிக்ரானை கண்டறிய புதிய டெஸ்டிங் கிட்! – ஐ.சி.எம்.ஆர் தகவல்!
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்ய விரைவில் கிட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலகம்
முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 35 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதியாகியுள்ள நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகளை அறிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க புதிய டெஸ்டிங் கிட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்
ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிட் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் ஒமிக்ரான் வைரஸை கண்டறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment