பழைய புரோட்டாவை சூடுபடுத்தி விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளருக்கு அபராதம்!
பழைய புரோட்டாவை சூடுபடுத்தி விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய புரோட்டாவை சூடுபடுத்தி விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்கள்
மத்தியில் புகார் எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் திடீரென ஆய்வு செய்தனர்
இந்த ஆய்வில் முந்தையநாள் விற்காத புரோட்டாவை நீரில் நனைத்து வேகவைத்து அதன் பின் மறுநாள் சூடுபடுத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த உணவக உரிமையாளருக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
மேலும் உணவு உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரோட்டாவை சூடுபடுத்தி விற்பனை செய்ததாக வெளிவந்த புகாரால் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment