1 முதல் 7ஆம் வகுப்பு வரை; மாணவர்களுக்கு இதோ சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

1 முதல் 7ஆம் வகுப்பு வரை; மாணவர்களுக்கு இதோ சூப்பர் அறிவிப்பு!

1 முதல் 7ஆம் வகுப்பு வரை; மாணவர்களுக்கு இதோ சூப்பர் அறிவிப்பு!



மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகள் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவையும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று பருவங்களுக்கும் தனித்தனி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடம் நடத்தப்படுகின்றன.

8 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆண்டு முழுவதும் ஒரே பாடப்புத்தகம் என்பதால், அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் வகுப்புகள் தொடங்கி விட்டன. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மூன்றாம் பருவப் பாடப் புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வழங்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தாமதமாகியுள்ளது. இதுதொடர்பாக பெற்றோர்களும் புகார்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதாவது, மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை தாமதமின்றி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

அப்படி வழங்கப்பட்ட பிறகு பாடங்களை ஆன்லைன் வழியாக விரைந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்று புதிதாக12,895 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 1,912 அதிகமாகும். அதிகபட்சமாக சென்னையில் 6,186 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
12 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு நாளுக்கு நாள் வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதால் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்த பெற்றோர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்களுடன் இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad