பாதிப்பு 1.6 கோடி; இறப்பு 1.28 லட்சம்: பிரான்ஸை விடாது துரத்தும் கொரோனா!
கொரோனா முதல் அலையை நினைவூட்டும் விதத்தில், மூன்றாவது அலையிலும் பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பிரான்ஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை கடந்த ஒரு மாதமாக ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 24 ஆம் தேதி, கொரோனா உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கவிட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பாரபட்சமின்றி அனைத்து கண்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி உள்ளது.
கொரோனா மூன்றாவது அவையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரான்ஸ் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களி்ன் எண்ணிக்கை 1.6 கோடியை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை கடந்துள்ளது என்று பிரான்ஸ் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா முதல் அலையை நினைவூட்டும் விதத்தில், மூன்றாவது அலையிலும் பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பிரான்ஸ் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment