இந்த மிட்டாய் கிலோ ரூ16ஆயிரம்.... அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

இந்த மிட்டாய் கிலோ ரூ16ஆயிரம்.... அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா?

இந்த மிட்டாய் கிலோ ரூ16ஆயிரம்.... அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா?


டில்லியில் தங்க மிட்டாய் கிலோ ரூ16000க்குவிற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்


சமீபகாலமாக உணவில் தங்கம் சேர்த்து தயாரிக்கும் உணவு டிரெண்டாக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்க பிரியாணி, தங்க வடாபாவ் போன்ற உணவுகள் டிரெண்டானது. இந்நிலையில் தற்போது தங்க மிட்டாய் என்ற இனிப்பு வகை டிரெண்டாகியுள்ளது.

பொதுவாக நாம் இனிப்புகளுக்கு மேலே ஒரு சில்வர் நிறகோட்டிங் செய்யப்பட்டு இனிப்புகள் விற்பனையாவதை பார்த்திருப்போம். அந்த இனிப்புகளில் சில்வர் நிற கோட்டிங்கிற்கு பதிலாக உண்மையான தங்கம் கலந்த கோட்டிங் உடனான இனிப்புகள் தற்போது டிரெண்டாகியுள்ளது.

டில்லி முஜிப்பூர் பகுதியில் உள்ள ஷகுன் ஸ்வீட்ஸ் என்ற ஸ்வீட் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட மிட்டாய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்த வீடியோவை oye.foodieee என்ற பக்கத்தில் அர்ஜூன் சவ்கார் என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
இந்த தங்க மிட்டாய் கிலோ ரூ16,000க்கு விற்பனையாகிறது. இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


No comments:

Post a Comment

Post Top Ad