18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நீங்களாவது உஷாராக இருங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நீங்களாவது உஷாராக இருங்க!


18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நீங்களாவது உஷாராக இருங்க!திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளிக்கச்சென்ற இளம்பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்மிடிக்காம்பட்டி ஊராட்சி அனிகானூர் பகுதியில் வசிப்பவர் திருப்பதி. ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

திருப்பதிக்கு கலையரசி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர். மகள் கலையரசி (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு படித்து வந்தார். கலையரசி தனது தம்பி மற்றும் நண்பர்கள் சிலருடன் இணைந்து கிணற்றுக்கு குளிக்கச்சென்றுள்ளார்.

தம்பி செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடுவதை கண்டு தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இடுப்பில் கேன் கட்டுக்கொண்டு கலையரசி நீச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கேன் நீச்சல் அடிக்க தொந்தரவாக இருப்பதாக நினைத்து அதனை கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு நீரில் மூழ்கிய கலையரசி வெளியே வராததால் அச்சமடைந்த அவரது தம்பி செல்வம் மற்றும் சக நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், இளைஞர்கள் சிலர் கிணற்றில் குதித்து தேடியும் கலையரசியை கண்டுபிடிக்க முடியாததால் திருப்பத்தூர் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கலையரசியை சடலமாக மீட்டனர். சடலத்தை கைப்பற்றிய கந்திலி காவல்நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீச்சல் தெரியாமல் விளையாட்டாக கிணற்றில் குளித்த இளம்பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad