பிப்ரவரி 1 முதல்... பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் சொன்ன அறநிலையத் துறை!
வார இறுதி நாட்களில் வழிப்பாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளில் முக்கியமாக வார நாட்களில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு ஆகியவை இனி இருக்காத என அரசு அறிவித்துள்ளது.
இதேபோன்று பிப்ரவரி 1 முதல் 1- 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மற்றொரு முக்கிய அறிவிப்பை அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. அதாவது வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிப்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நீக்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம் இனி பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோயிலுக்கு சென்று வழிப்படலாம். அரசின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு திறந்து வைத்திருப்பதன் மூலம் பரவதா கொரோனா, வழிப்பாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதால் பரவி விடுமா என்று பாஜக, ஹிந்து முன்னணி உள்ளிட்டவை தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.
அத்துடன் அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடர் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் அறநிலையத் துறை இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment