2022 முதல் ஜல்லிக்கட்டு… புதுக்கோட்டையில் மிரட்டும் காளைகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

2022 முதல் ஜல்லிக்கட்டு… புதுக்கோட்டையில் மிரட்டும் காளைகள்!

2022 முதல் ஜல்லிக்கட்டு… புதுக்கோட்டையில் மிரட்டும் காளைகள்!



தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டையில் துவங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
சிலிர்க்க வைக்கும் சிறுமியின் சிலம்ப சாதனை!

ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகதத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விளையாட்டுப்போட்டி, காளை மாடுகளை அவிழ்த்து விட்டு அதை அடக்குவது தான் இந்த போட்டியின் பிரதானமான விஷயம், இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் ஒரு அடையாளமாககூட சொல்லலாம்.
2011ம் ஆண்டு காளையை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஜல்லிகட்டு மிருகங்களை வதை செய்வது என கூறி ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரி பல இடங்களில் போராட்டம் நடந்து வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.

2017ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் யார் தலைமையும் இல்லாமல் கூடினர். இந்த கூட்டம் சில மணி நேரங்களில் பெரும் கூட்டமாக மாறி தமிழகம் முழுவதும் இந்த புரட்சி பரவியது. பல இடங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடினர். இதன் பின் பல்வேறு நடவடிக்கைககளுக்கு பிறகு ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைத்தது.


இதனிடையே, கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தது. கொடிய வைரஸ் தொற்றுடன் நாடே போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடம் அளிக்க கூடாது.

எனவே மருத்துவர்களின் தொழில்முறை கருத்துகளுக்கு செவிசாய்த்து, பொதுமக்களை ஆபத்தான நோயில் இருந்து காக்கவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் என்று பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. அனுமதி கிடைத்த பிறகு, தமிழகத்தில் இந்த வருடத்திற்க்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் 600க்கும் அதிகமான காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மேற்பார்வையின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.










No comments:

Post a Comment

Post Top Ad