சின்னத்திரை பொங்கல் விருந்து: அண்ணாத்த முதல் ஜெய் பீம் வரை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

சின்னத்திரை பொங்கல் விருந்து: அண்ணாத்த முதல் ஜெய் பீம் வரை!

சின்னத்திரை பொங்கல் விருந்து: அண்ணாத்த முதல் ஜெய் பீம் வரை!


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பாக உள்ள பெரிய ஹீரோக்களின் படங்கள்.
இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புதிய படங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பாக உள்ளன. இந்தமுறை பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகததால் சின்னத்திரையில் பெரிய ஹீரோக்களின் படங்களை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் 'அண்ணாத்த'. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், சம்பத், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் 'அரண்மனை 3'. சுந்தர் சி யின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற இந்தப்படம் இன்று மதியம் 12.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான சூர்யா நடிப்பில் வெளியான படம் 'ஜெய் பீம்'. அனைத்து தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருளர், பழங்குடியினருக்காக வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகி இருந்தது. இந்தப்படம் நாளை மதியம் 12.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' படம் கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. அதேபோல் திரையுலக பிரபலங்களும் இந்தப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad