மீண்டும் சிக்கிய ராஜேந்திர பாலாஜி; இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

மீண்டும் சிக்கிய ராஜேந்திர பாலாஜி; இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!

மீண்டும் சிக்கிய ராஜேந்திர பாலாஜி; இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!



ராஜேந்திர பாலாஜி மீண்டும் வசமாக சிக்கியுள்ளார். இந்த முறை ஓடவும் முடியாது..ஒளியவும் முடியாது என்பதால் என்ன செய்வது? என புரியாமல், மண்டையை போட்டு குழப்பிக்கொண்டு தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார் மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய இருந்த நிலையில் திடீரென ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
சிலைக்கு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தந்த பெருசு.! வைரல் வீடியோ

இதை தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது தமிழக தனிப்படை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரிடம் காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் 6ம்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர்.

ஆனால் மதுரை சிறையில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறை துறை அறிவித்ததால் அவர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவரது வக்கீல்கள் இல்லத்தில் தமிழக காவல் துறையினர் நடத்திய சோதனை குறித்து சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் மோசடி புகார் தொடர்பாக இதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு தமிழக காவல் துறை சம்மன் வழங்கவில்லை. முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் முன்னதாகவே அவரை கைது செய்தது நீதிமன்ற அவமதிப்பு என்று வாதிட்டார்.

இதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியமாக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
இதை தொடர்ந்து இன்று காலை ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் முத்துப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் 4 காரில் சிறைக்கு வந்திருந்தனர். பின்னர் காலை 7 மணி அளவில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியை அழைத்து சென்றனர்.
திருச்சி மத்திய சிறையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கே உரிய ஸ்டைலில் சிங்க நடைபோட்டு சென்றதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

தற்போது சிங்க நடை போட்டு ராஜேந்திர பாலாஜி சென்றாலும் முக்கிய ஆவணமாக கருதப்படும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் இனி ஓடவும் முடியாது..ஒளியவும் முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad