ஜன. 23: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

ஜன. 23: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!

ஜன. 23: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,57,732 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 30,567 பேர் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4 பேரும், குஜராத் 2, புதுச்சேரி, ஜார்கண்ட் மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,06,03,494 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,324 பேர் ஆண்கள்; 13,256 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 18,28,727 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 13,05,225 ஆகவும் அதிகரித்து உள்ளது. 24,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28,95,818 ஆக உயர்ந்துள்ளது.40 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 15 பேரும், அரசு மருத்துவமனையில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,218 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,452 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 23ம் தேதி) 6,383 ஆக சற்று குறைந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad