தமிழ்நாட்டில் இப்படி ஒரு காதல் ஜோடியா.? விஷயத்தை கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!
சேலத்தில் பழைய புல்லட்டை விலைக்கு வாந்த காதல் ஜோடி சினிமா பாணியில் ட்ரைல் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் பழைய பேருந்துநிலையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகன ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் ராஜகணபதி ஏஜென்சி என்ற இரண்டாம் தர புல்லட் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்திற்கு நேற்று காலை வந்த இரண்டு காதல் ஜோடிகள் வாகனத்தை விலை பேசுவதற்காக பல்வேறு வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு காதல் ஜோடி புல்லட் ஒன்றை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி பணம் கட்ட தயாராக இருந்துள்ளனர்.
பணம் செலுத்துவதற்கு முன்பு வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் வாகன உரிமையாளர் வாகனத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது வாகனத்தில் ஏறி அமர்ந்த காதல் ஜோடிகள் சட்டென பறந்தனர்.
ரூ.250 கோடியில் புதிய பாலம்; பாமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
வெகு நேரமாகியும் காதல் ஜோடி திரும்பி வராததால் வாகன உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து உடன் வந்த மற்றொரு காதல் ஜோடி இடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் சேலம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தலைமறைவான இருவரும் காதல் ஜோடி என்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வாகன உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடிவேலு திரைப்பட பாணியில் இருசக்கர வாகனத்தை விலைபேசுவது போல் நடித்து காதல் ஜோடி புல்லட்டை திருடிச்சென்ற சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தி வைரலாக பரவி வருகின்றன.
No comments:
Post a Comment