'மிகமோசமான சாதனை'...இந்திய ஒர்ஸ்ட் கேப்டன்களில் ராகுல்தான் நம்பர் 1: கசப்பான புள்ளி விபரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

'மிகமோசமான சாதனை'...இந்திய ஒர்ஸ்ட் கேப்டன்களில் ராகுல்தான் நம்பர் 1: கசப்பான புள்ளி விபரம்!

'மிகமோசமான சாதனை'...இந்திய ஒர்ஸ்ட் கேப்டன்களில் ராகுல்தான் நம்பர் 1: கசப்பான புள்ளி விபரம்!



இந்திய அணியின் மோசமான கேப்டன்களில் கே.எல்.ராகுல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, கேப்டன் ரோஹித் ஷர்மா காயத்தால் அவதிப்படுவதால், கே.எல்.ராகுல் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ தெரிவித்தது.
இதனால், ராகுல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ராகுலுக்கும் இத்தொடர் மிகவும் முக்கியமானதுதான். ஏனென்றால், 2023 ஒருநாள் உலகக் கோப்பையோடு ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி காலம் முடிந்துவிடும் எனக் கருதப்படுவதால், அடுத்த கேப்டனாக கே.எல்.ராகுல்தான் இருப்பார் என பேச்சுக்கள் அடிப்பட்டு வந்தது.

இதனால், இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு, கேப்டனாக தன்னை பிசிசிஐக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், அவரை லெவன் அணித் தேர்வில் இருந்து, பௌலர்களை வேலை வாங்குவது வரை அனைத்திலும் கோட்டைவிட்டுள்ளார். ஆம், சூர்யகுமார் யாதவ் இருந்த நிலையில், முதல் போட்டியில் வெங்கடேஷ் ஐயரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும்தான் சேர்த்தார்.

அடுத்து, பந்துவீச்சைப் பொறுத்தவரை, விக்கெட் விழும்போதெல்லாம் அட்டாக்கிங் பீல்டிஙை செட் செய்யாமல், பேட்ஸ்மேன்களை சுலபமாக பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டார். முதல் இரண்டு போட்டிகளிலும் இதே தவறை செய்த அவர், மூன்றாவது போட்டியில் ஒருவழியாக வெங்கடேஷ் ஐயரை நீக்கி, சூர்யகுமார் யாதவை கொண்டு வந்தார். இருப்பினும், பௌலர்களை வேலை வாங்குவதில், பஞ்சாப் கிங்ஸில் எப்படி கோட்டைவிட்டாரோ, அதேபோல்தான் கோட்டைவிட்டார். இதனால், மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்க அணி பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைத்து ரன்களை குவித்தார்கள்.

அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் மிடில் வரிசை வீரர்கள் படுமோசமாக சொதப்பிய நிலையில், தீபக் சஹார் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் பிரசித் கிருஷ்ணா சிங்கில் எடுத்துக் கொடுக்க, அடுத்த பந்திலேயே யுஜ்வேந்திர சாஹல் ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம், இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று, முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைப் பெற்றுக்கொடுத்த முதல் கேப்டனாக கே.எல்.ராகுல் மாறியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைப் பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன்களாக வெங்சர்கர், ஸ்ரீகாந்த், முகமது அசாருதீன் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad