பொங்கல் பரிசில் பப்பாளி விதை?; பகீர் தகவல் அம்பலமானது!
பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதிலாக பப்பாளி விதை வழங்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அதிமுக முன்னாள் அமைச்சரே கூறியுள்ளதால் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுகாவிரி டெல்டா பகுதிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அதிமுக எழுப்பி இருக்கிறது.
.
மேலும் கடந்த ஆண்டு வழங்கியது போன்று, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் என்று நிர்ணயித்து முழு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தா நல்லூர் மற்றும் திருத்துறைப்பூண்டி என 8 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் திருவாரூர் மணிகண்டன், செந்தில், கொரடாச்சேரி சேகர், நகரச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நன்னிலம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.
No comments:
Post a Comment