விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15,000 பெற உடனே அப்பளை பண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15,000 பெற உடனே அப்பளை பண்ணுங்க!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15,000 பெற உடனே அப்பளை பண்ணுங்க!


விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகள் மின் மோட்டார் மற்றும் பைப்லைன் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க 10,000 ரூபாய் மற்றும் விவசாய பைப்லைன் அமைக்க 15,000 அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இம்மானிய தொகை பெற http://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் மற்றும் புலப்பட நகலுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கப்படும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் பணியாளர் நல வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாரியத்தில் நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சி தூய்மை மற்றும் அனைத்து துறைகளில் பணி புரியும் தற்காலிக ஒப்பந்த அடிப்படை தினக்கூலி தொகுப்பூதியம் பெறும் தூய்மை பணியாளர்கள், தற்காலிக உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்து கொள்ளும் அனைவருக்கும் தூய்மை பணியாளர் நல வாரிய நலவாரிய அடையாள அட்டை வழங்கப்படும். தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்களுக்கு நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

தூய்மை பணியாளர் நல வாரியம உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் 5 லட்சமும், விபத்தில் ஒரு கை அல்லது கால், கண் பார்வை இழந்தால் 1 லட்சமும், இயற்கை மரண உதவித் தொகையாக 20 ஆயிரமும், முதியவர் உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad