தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளது
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 31 ஆம் தேதி வரை, வார நாட்களில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதத்தின் மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று குறையும் பட்சத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசுத் தரப்பில் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில், பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடு, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு, திரையரங்குகளை மூடுவது, இந்த மாவட்டங்களுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்துவது போன்ற கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment