Dhanush:காதல் வேலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிசி: குவியும் வாழ்த்து - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

Dhanush:காதல் வேலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிசி: குவியும் வாழ்த்து

 Dhanush:காதல் வேலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிசி: குவியும் வாழ்த்து

\


தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிசியாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்கள்.
ராமோஜிராவ் ஸ்டுடியோஸில் இருக்கும் சித்தாரா ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறார்கள். காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் ஹைதராபாத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் அவர் தன் குழுவினருடன் அந்த பாடல் குறித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரிவை நினைத்து நினைத்து அழாமல் தன்னை பிசியாக வைத்திருக்கும் ஐஸ்வர்யாவை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். அதே சமயம் மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக பிரிவு முடிவை கைவிடுமாறு ரஜினி ரசிகர்கள் ஐஸ்வர்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலை திரையில் அழகாக காட்டுவதில் ஐஸ்வர்யா வல்லவர் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் தனுஷை வைத்து இயக்கிய 3 படத்தை தான் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா?

தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியவில்லை, அது வெறும் குடும்பத் தகராறு தான் என்று கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தனுஷ் பெயரை இன்னும் நீக்கவில்லை. அதனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad