'மு.க.ஸ்டாலின் எனும் நான்!' - பெயர் ரகசியத்தை சொன்ன முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

'மு.க.ஸ்டாலின் எனும் நான்!' - பெயர் ரகசியத்தை சொன்ன முதல்வர்!

'மு.க.ஸ்டாலின் எனும் நான்!' - பெயர் ரகசியத்தை சொன்ன முதல்வர்!தனது பெயருக்கு பின்னால் உள்ள ரகசியத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகனின் மகள் எம்.அருணா- எம்.அசோக் சக்கரவர்த்தி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மணமக்களை வாழ்த்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பூச்சி முருகனை நான் முருகன் என்றே அழைப்பேன். ஏனெனில் எனக்கு முருகன் மீது அன்பு, பாசம் உண்டு. என்னை பொறுத்தவரை முதல் முதலமைச்சர் என்பதை விட முதல் மாநிலம் தமிழ்நாடு என்பதாக வர வேண்டும். பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயர் தான். எனக்கு மட்டுமே காரண பெயர்.

எனக்கு அய்யாதுரை என பெயர் வைக்க கருணாநிதி விரும்பினார். அய்யா என்பது தந்தை பெரியாரை குறிக்கும். துரை என்பது அண்ணாதுரையின் பெயரில் உள்ள துரையாகும். ஆனால் சோவியத் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்ட போது அவருக்கு ஒரு துண்டு சீட்டை ஒருவர் கொடுத்தார். அதில் "உங்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்" என எழுதியிருந்தது. அப்போதே எனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பதாக" கருணாநிதி அந்த கூட்டத்திலேயே அறிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad