உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை... தாய் நெகிழ்ச்சி செயல்!
222222222222222222222222222222222222222222222222222222222222222222222222
இரண்டு வயது பெண் குழந்தையின் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தன் கல்லீரலை கொடுத்த தாயின் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன், இவரது 2 வது மகள் ரபீதா பாத்திமா. குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டது. திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது, கல்லீரலில் யூரியா சுழற்சி சீர்கேடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மருத்துவர்கள் கண்டறிந்து, கல்லீரல் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
சிலிர்க்க வைக்கும் சிறுமியின் சிலம்ப சாதனை!
இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும், கல்லீரல் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு பெற்றோர் முடிவெடுக்க அவகாசம் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மிகவும் கலங்கிய நிலையில் இருந்த பெற்றோர்கள் திடீரென அந்த குழந்தையின் தாய் தன்னுடைய கல்லீரலை கொடுக்க முடிவு செய்து மருத்துவரை அணுகினார்.
அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளங்குமரன் மற்றும் மருத்துவ குழுவினர் இது குறித்து ஆலோசனை செய்து, 6 மாத குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு தயார்படுத்தி ஒரு வருடம் ஒன்பது மாதம் ஆன நிலையில், அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment