பெண் குழந்தைகளுக்கு ரூ.36,000 ஆண் குழந்தைகளுக்கு ரூ.30,000 - மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

பெண் குழந்தைகளுக்கு ரூ.36,000 ஆண் குழந்தைகளுக்கு ரூ.30,000 - மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

பெண் குழந்தைகளுக்கு ரூ.36,000 ஆண் குழந்தைகளுக்கு ரூ.30,000 - மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை


முன்னாள்‌ படைவீரர்களின்‌ குழந்தைகளுக்கு பிரதம மந்திரியின்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 60% மதிப்பெண்களுக்கு மேல்‌ +2 அல்லது இளங்கலை படிப்பில்‌ பட்டம்‌ பபற்று முதலாம்‌ ஆண்டு பொறியியல்‌, மருத்துவம்‌, கால்நடை மருத்துவம்‌, பி.டெக்‌, பி.எஸ்‌.சி. நர்சிங்‌, பி.எஸ்‌.சி. விவசாயம்‌, பி.எட்‌ படிப்பு மற்றும்‌ எம்‌.பி.ஏ., எம்‌.சி.ஏ., சட்டம்‌ மற்றும்‌ பல தொழிற்கல்விகள்‌ படிக்கும்‌ மாணவர்கள் பாரத பிரதம மந்திரியின்‌ கல்வி உதவி திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்‌ ஆகின்றார்கள்‌.
இந்நிதியுதவி தற்போது உயர்த்தப்பட்டு முன்னாள்‌ படைவீரரின்‌ மகளுக்கு வருடத்திற்கு ரூ.36,000 வீதமும்‌, மகனுக்கு ரூ.30,000 வீதமும்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்விச்‌ சலுகையினை அதிக அளவில்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு தற்போது கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌ முன்னாள்‌ படைவீரர்கள்‌ அல்லது சார்ந்தோர்கள்‌ முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்திற்கு நேரில்‌ வந்து உரிய அறிவுரையினை பெற்று https://www.ksb.gov.in/ என்ற இணையதள முகவரியில்‌ உரிய ஆவணங்களுடன்‌ பதிவு செய்து பயன்பெறுமாறும்‌, நீங்கள் பதிவு செய்த விவரத்தை உங்கள் மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கும் பட்சத்தில் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad