மின் கட்டணத்தை கணக்கிட புதிய ஆப்: இனிமே இப்படி தான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

மின் கட்டணத்தை கணக்கிட புதிய ஆப்: இனிமே இப்படி தான்!

மின் கட்டணத்தை கணக்கிட புதிய ஆப்: இனிமே இப்படி தான்!


மின் கட்டணத்தைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின் கணக்கீட்டாளா்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மின் கட்டணத்தை கணக்கிடுவதற்காக புதிய செயலி (ஆப்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை சோதனை முயற்சியாக குறிப்பிட்ட மின் கணக்கீட்டாளர்கள் பயன்படுத்த உள்ளனர். அதன் பின்னர் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தாழ்வழுத்த மின் நுகா்வோரின் மின் கட்டணத்தைக் கணக்கிடும் வகையில் மின்வாரியத்தில் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆப் தொடா்பான சோதனையும் வெற்றியடைந்தது.

இது குறித்து மின் வாரிய வட்டாரத்தில் விசாரிக்கும் போது இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் மின் கணக்கீட்டாளா்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த ஆப்பை வழங்கி, சோதனை மேற்கொள்ள மின்வாரிய தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். இதற்காக சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, வேலூா், தருமபுரி மின் பகிா்மான வட்டங்களைச் சோந்த 27 மின் கணக்கீட்டாளா்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அவா்கள் 27 பேரும் பிப்ரவரி 1 முதல், இந்த ஆப் மூலமாக மட்டுமே மின் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வா். அவா்களுக்கு வழங்குவதற்காக யுஎஸ்பி உடனான கேபிள்களும் சம்பந்தப்பட்ட மின் பகிா்மான வட்ட மேலாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆப்பும் (ஏபிகே வகை) வரும் 31ஆம் தேதி மின்னஞ்சல் வாயிலாக அவா்களுக்கு வழங்கப்படவுள்ளது என்கிறார்கள்.

இந்தச் சோதனை முயற்சியை வெற்றியடையச் செய்யும் வகையில், ஆப் மூலம் மின் கட்டணத்தைக் கணக்கிடுவது தொடா்பான பயிற்சியை தொழில்நுட்பப் பிரிவு தலைமையகத்துடன் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட கணக்கீட்டாளா்களுக்கு, மேலாளா்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரியவந்தால், உடனடியாக தொழில்நுட்பப் பிரிவு தலைமையகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்தடுத்த மின் பகிா்மான வட்டங்களில் வெற்றியடைந்த பின்னா், பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறுகின்றனர். இதனால் உபயோகித்த மின் அளவு, அதற்கான கட்டணம் ஆகியவற்றை எளிமையாக இந்த ஆப் மூலம் அறிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad