சதுரகிரி பக்தர்கள் ஷாக்; வனத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

சதுரகிரி பக்தர்கள் ஷாக்; வனத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு!

சதுரகிரி பக்தர்கள் ஷாக்; வனத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு!வனத்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு சதுரகிரி பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோயில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு;நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசையில் 4 நாட்கள், பௌர்ணமியில் 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 1ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை.

அதேப்போல இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை. நீர் நிலைகளில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் உள்ள பக்தர்களுக்கு சேவை கட்டணமாக ரூ. 5 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவை கட்டணம் தற்போது ரூ.10 ஆக உயர்த்தப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad