பென்ஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 39 கோடிக்கு கிடைத்தது ஒப்புதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

பென்ஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 39 கோடிக்கு கிடைத்தது ஒப்புதல்!

பென்ஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 39 கோடிக்கு கிடைத்தது ஒப்புதல்!
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 4 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் கோப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய கோப்புகளை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக புதுச்சேரி அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 4 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி மத்திய ஆயுஷ் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக, புதுச்சேரி இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவ அதிகாரிகளின் பணிஓய்வு பெறும் வயதினை 60-ல் இருந்து
65-ஆக உயர்த்தும் கோப்புக்கு ஒப்புதல், 2021-22 நிதியாண்டில் ஊதியம் வழங்குவதற்காக PRTC நிறுவனத்திற்கு நிதி மானியத்தின் 5-வது தவணையாக ரூ. 1.17 கோடி நிதி அளிக்கும் கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி, தொழில்துறை சட்டம், 1941-இன் கீழ் மின்துறைச் சேவைகளை “பொதுப் பயன்பாட்டுச் சேவையாக“ 19.1.2022 முதல் 18.7.2022 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 2021, 2022-க்கான முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் வழங்க ரூ. 39.72 கோடிக்கான செலவின ஒப்புதல் ஆகிய நான்கு கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad