திருக்கோயில்களை பரமாரிக்க முதல்வர் தலைமையில் குழு!
திருக்கோயில்களை பராமரிப்பதற்காக உயர்நிலை ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் திருக்கோயில்களில் பக்தா்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயா்நிலை ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சமயத்தில் திமுகவுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதே. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆக்கபூர்வமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
2022ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடா்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான உயா்மட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆலோசனைக் குழுவினை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
“பதவி வழி அலுவல் சாா் உறுப்பினா்களில் உயா்நிலை ஆலோசனைக் குழு தலைவராக தமிழக முதல்வா், துணைத்தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா், உறுப்பினராக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலா், உறுப்பினா்- செயலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையா், அலுவல் சாரா உறுப்பினா்களாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முனைவா் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா்,
நீதிபதி டி.மதிவாணன் (ஓய்வு), சுகி.சிவம், கருமுத்து தி.கண்ணன், முதுமுனைவா் மு.பெ.சத்தியவேல் முருகனாா், ந.இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமாா், மல்லிகாா்ஜுன் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கா், தேச மங்கையா்க்கரசி ஆகியோா் ஆலோசனைக் குழுவின் உறுப்பினா்களாக மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பா்” என இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment