6 வயது சிறுமிக்கு 55 வயது நபர் செய்த கொடுமை... ஓடும் பேருந்தில் நடந்தது என்ன?
உளுந்தூர்பேட்டை அருகே 6 வயது சிறுமிக்கு ஓடும் பேருந்தில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலத்தில் இருந்து பெண் ஒருவர் தனது 6 வயது மகளோடு தனியார் பேருந்தில் பண்ருட்டிக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்த சுமர் 55 வயதான நபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால், அச்சமடைந்த சிறுமி நடந்ததை தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் அந்த நபரிடம் சென்று ஆவேசமாக பேசியுள்ளார். அப்போது, பெண்ணை மிரட்டிய அந்த நபர், தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்துவிடுவேன் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்ததை எடுத்துக்கூறி புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் 55 வயது பரசுராமன் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த காமக்கொடுரனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment