விண்ணில் ஒலிக்கவுள்ள இளையராஜாவின் பாடல்..நாட்டிற்காக அவர் செய்த காரியம்..பாராட்டும் ரசிகர்கள்..!
இளையராஜா இசையமைக்கும் பாடல் சாட்டிலைட் வாயிலாக விண்ணிற்கு செல்லவிருக்கிறது
இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ் நாம் சொல்லி எவரும் அறியப்போவதில்லை. எங்கு திரும்பினாலும் அவரது இசையால் நம்மை ஆட்கொண்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா பல உயரிய விருதுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.
இந்நிலையில் அவரின் இசைக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிக குறைவான எடையை உடைய சாட்டிலைட்டை தமிழகத்தை சேர்ந்த மாணவர் குழு ஒன்று தயாரித்துள்ளது.
வரும் இந்திய சுதந்திர நாளன்று இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்த பாடல் இடம்பெற்ற அந்த சாட்டிலைட்டை விண்ணிற்கு செலுத்த அந்த மாணவர்குழு முடிவுசெய்துள்ளது.கடந்த 75 ஆண்டுகள் இந்திய நாடு நிகழ்த்திய சாதனையையும், இனி நிகழ்த்தப்போகும் சாதனையும் எடுத்துரைக்கும் வகையில் அப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்பாடலை சுவானந்த் கிர்கிரே ஹிந்தியில் எழுத இளையராஜா இசையமைத்துள்ளார். ஹிந்தியில் மட்டுமில்லாமல் இப்பாடலை தமிழிலும் இளையராஜாவின் இசையில் விண்ணிற்கு செலுத்தவுள்ளதாக தெரிகிறது. இதற்காக இளையராஜா பணம் ஏதும் வாங்கிகொல்லாமல் நாட்டிற்காக செய்யும் செயலாக எண்ணி முழு அர்ப்பணிப்போடு செய்திருக்கிறார்.
இதனைக்கேட்ட ரசிகர்கள் இளையராஜாவை பாராட்டி வருகின்றனர். கூடிய விரைவில் இளையராஜாவின் இசை விண்ணில் ஒலிக்கப்போவதை எண்ணி தமிழ் ரசிகர்கள் அனைவரும் பெருமிதமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment