இதன் காரணமாக விக்ரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? வெளியான தகவல் இதோ.
விக்ரம் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துவருகிறார். மாநகரம் படத்தின் மூலம் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி படத்தின் மூலம் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பைப்பெற்றார். கடந்த பொங்கலையொட்டி வெளியான மாஸ்டர் படம் கொரோனா சூழலிலும் மாபெரும் வசூலை ஈட்டியது.
மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பல ரசிகர்களை ஈர்த்தது. மேலும் விஜய்க்கு நிகரான கதாபாத்திரத்தில் வில்லனாக விஜய் சேதுபதி கலக்கியிருப்பார். இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்த கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபஹாத் ஃபாசில் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கமல் குணமடைந்து தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டுளோர்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதாவது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் விக்ரம் திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
கமல், விஜய் சேதுபதி, ஃபஹாத் ஃபாசில் ஆகியோர் நடிக்கும் இப்படம் ஆக்க்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment