பிரதமர் மோடியை கலாய்த்த டிவி ரியாலிட்டி ஷோ: நடவடிக்கை எடுக்கும் எல்.முருகன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 16, 2022

பிரதமர் மோடியை கலாய்த்த டிவி ரியாலிட்டி ஷோ: நடவடிக்கை எடுக்கும் எல்.முருகன்!

பிரதமர் மோடியை கலாய்த்த டிவி ரியாலிட்டி ஷோ: நடவடிக்கை எடுக்கும் எல்.முருகன்!



டிவி ரியாலிட்டி ஷோ ஒன்று பிரதமர் மோடியை நகைச்சுவையாக விமர்சித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்
கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பலரும் இன்றளவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பலவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியின் காமெடி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட குழந்தைகள் மறைமுகமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை திமுக தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் உள்பட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சாரார் இதனை நகைச்சுவையாக பார்த்தாலும், பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த தொலைக்காட்சி சேனல் நிர்வாகத்தின் மீதும், கலந்து கொண்ட நடுவர்கள் மீதும், அக்குழந்தைகளின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரூகின்றனர்.

இந்த நிலையில், டிவி ரியாலிட்டி ஷோ ஒன்று பிரதமர் மோடியை நகைச்சுவையாக விமர்சித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டிவி ரியாலிட்டி ஷோ ஒன்று பிரதமர் மோடியை நகைச்சுவையாக விமர்சித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், “நடவடிக்கை யார் மீது? எடுத்தவர் மீதா?, நடித்தவர் மீதா? அல்லது அதை பார்த்து சிரித்தவர் மீதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad