பீய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு: கட்டுப்பாடுகள் தீவிரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 16, 2022

பீய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு: கட்டுப்பாடுகள் தீவிரம்!

பீய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு: கட்டுப்பாடுகள் தீவிரம்!


சீன தலைநகர் பீய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை திரிபானது வேகமாக பரவும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாலும், உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாலும் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன.

சீனாவை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை அந்நாடு தீவிரமான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி கொள்கைகளால் கட்டுப்படுத்தியது. இதனிடையே, அந்நாட்டின் சில இடங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகளை சீனா தீவிரப்படுத்து வருகிறது.

இந்த நிலையில், சீன தலைநகர் பீய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹைடியன் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கு பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு பீய்ஜிங்கில் கண்டறியப்பட்டதையடுத்து, சீனா கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்நகருக்குள் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பீய்ஜிங் நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து கொரோனா இல்லா சீனா என்ற கொள்கை அடிப்படையில் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உணவு வாங்க கூட அவர்கள் வெளியே வரக் கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளையும் சீன அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை உலோக பெட்டி முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைத்திருப்பதாக வீடியோ ஒன்றும் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad