விரட்டி விடப்பட்ட சீமான்; தம்பிகளுக்கு அடுத்தடுத்து ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

விரட்டி விடப்பட்ட சீமான்; தம்பிகளுக்கு அடுத்தடுத்து ஷாக்!

விரட்டி விடப்பட்ட சீமான்; தம்பிகளுக்கு அடுத்தடுத்து ஷாக்!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விரட்டி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் உதவியுடன் தலைவன் தப்பி வந்த தகவலை கேட்டு தம்பிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் உயர் சாதியினரின் இரும்பு பிடியில் சிக்கி இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்ததால், நில உரிமையாளர்களுக்கும், விவசாயி கூலிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.


இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தைகள் ; பொதுமக்கள் பீதி!

இதன் விளைவாக கடந்த 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உலகமே கிறிஸ்துமஸ் சந்தோஷத்தில் மூழ்கி இருந்த சூழலில் கீழ் வெண்மணி கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் வயது மற்றும் பாலின பேதம் இல்லாமல் 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் என்று ஒரே குடிசையில் வைத்து 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

இந்த சோக சம்பவத்தின் 53வது ஆண்டு நினைவு தினம் கீழ்வெண்மணியில் கடந்த டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 44 பேர் இறந்து போன குடிசை இருந்த இடத்தில் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து சீமானை காவல்துறையினர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக நாம் தமிழர் கட்சி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பை கையில் எடுத்துக் காட்டி பேசிய பேச்சு மற்றும் செய்த அரசியல் அக்கட்சியின் தொண்டர்களையும் அந்த வழியிலேயே நடத்திச் செல்கிறது.

இதன் விளைவாக நாம் தமிழர் கட்சி பேச்சாளருக்கு மேடையிலேயே தர்ம அடி விழும் சம்பவம் நூல் இழையில் தப்பியது. இதன் தொடர்ச்சியாக கீழ்வெண்மணியில் அஞ்சலி செலுத்த சென்ற சீமானை கடுமையாக திட்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் விரட்டி விட்ட சம்பவம், தம்பிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad