முதல்வருக்கு சபாஷ் போட்ட பீட்டர் அல்போன்ஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 18, 2022

முதல்வருக்கு சபாஷ் போட்ட பீட்டர் அல்போன்ஸ்

முதல்வருக்கு சபாஷ் போட்ட பீட்டர் அல்போன்ஸ்




சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழ்நாடு அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டன.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குடியரசு தின அணிவகுப்பில், தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராஜ்நாத் சிங் அவர்களின் கடிதம் குறித்து, “குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு 'இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம்.

நான்காவது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமுமின்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மாண்புமிகு ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது” என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும், சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வரலாறை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? முதலமைச்சர் அவர்களே! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்!” என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad