பொங்கல் பரிசு: எதிர்பார்த்த அந்த நாள் இன்று தான்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசு வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைப்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், துணிப்பை உள்பட மொத்தம் 21 பொருட்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒவ்வோர் அட்டைக்கும் ரூ.505 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படவுள்ள நிலையில். இத்திட்டத்துக்காகத் தமிழக அரசு ரூ.1,088 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசு
தொகுப்புக்கான டோக்கன்களை வழ
பொங்கல் பரிசு பொருள்கள் நேற்றே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 4) முதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி வரை டோக்கன் படி பொங்கல் பரிசு விநியோகிக்கப்படவுள்ளது. அன்றைய தினத்துக்குள் பெற முடியாதவர்கள் பண்டிகை முடிந்த பிறகு கூட வாங்கிக்கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பொங்கல் பரிசு வழங்கப்படுவதைக் கண்காணிக்க மண்டல வாரியாக தமிழ்நாடு முழுவதும் 12 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பின் தரம் குறித்தும் ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment