பொங்கல் பரிசுத் தொகுப்பில் இவ்வளவு கோடி ரூபாய் ஊழல்? -ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 20, 2022

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இவ்வளவு கோடி ரூபாய் ஊழல்? -ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இவ்வளவு கோடி ரூபாய் ஊழல்? -ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு!



தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாஜக .தேசிய செயலாளர் ஹெச். .ராஜா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பாஜக .தேசிய செயலாளர் ஹெச். ராஜா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது, ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரிய தற்போதைய முதல்வர், தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளார்.

பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் தரமற்றவையாக, கலப்படமாக இருந்தன. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.

குடியரசு தின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு விஷயத்தில் தமிழக அரசு இதில் நாடகம் ஆடுகிறது. கடந்த 2006 இல் மத்தியில் திமுக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்தது.

மற்ற சில ஆண்டுகளில் அனுமதி கிடைக்கவில்லை என்பதை திமுக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை. கடந்த சில ஆண்டுகளில் பாஜக .ஆட்சி நடைபெறும் உ.பி. அரசுக்கும் வாகன ஊர்தி அனுமதி கிடைக்கவில்லை

பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பேட்டியின் போது தமிழக பாஜக கலை கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் பி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் கார்த்தி, செல்வபுரம் மண்டல் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad