கொரோனா மூன்றாம் அலை தமிழகத்தில் எப்போது உச்சம் தொடும்? -ஐஐடி வல்லுநர் கணிப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை எப்போது உச்சம் அடையும் என்பது குறித்து கான்பூர் ஐஐடி வல்லுநர் கணித்துள்ளார்.
பல்வேறு உலக நாடுகளை போலவே இந்தியாவிலும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக வீசி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மூன்றாவது அலை எப்போது உச்சத்தை அடையும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இதற்கான விடையை கான்பூர் ஐஐடி பேராசிரியரும், கொரோனா ஆராய்ச்சியாளருமான மணீந்திர அகர்வால் கணித்துள்ளார். இவரது கணிப்பின்படி தேசிய அளவில் ஜனவரி 23 ஆம் தேதி கொரோனா உச்சத்தை தொடும். அப்போது தினமும் புதிதாக தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை 7.5 லட்சம் வரை இருக்கும்.
அதேசமயம் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில், கொரோனா மூன்றாவது அலை ஏற்கெனவே உச்சத்தை அடைந்துவிட்டது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத், அரியானா ஆகிய மாநிலத்தில் தற்போதும் (நிகழ் வாரம்) மூன்றாம் அலை உச்சம் பெற்றுள்ளது.
அதேசமயம் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி இறுதி வாரத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடையும் என்று ஐஐடி பேராசிரியர் கணித்துள்ளார்.
அதேசமயம், கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் பரவ தொடங்கியபோது இருந்த பயம் தற்போது இல்லை. அது லேசான தொற்றை மட்டுமே ஏற்படுத்தி செல்கிறது.
இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்கள் என்ற இருபிரிவினர்களில் எதிர்ப்பு சக்தி குறையாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தொற்று வந்து சென்றுவிட்டதும், அவர்களை தற்போது ஒமைக்ரான் பெரும்பாலும் தாக்குவதில்லை என்பதே இதற்கு காரணம் என்றும் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment