எம்பிபிஎஸ் அட்மிஷனுக்கு ஆன்லைனில் கவுன்சிலிங்: மருத்துவர் சங்கம் கிளப்பும் டவுட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 21, 2022

எம்பிபிஎஸ் அட்மிஷனுக்கு ஆன்லைனில் கவுன்சிலிங்: மருத்துவர் சங்கம் கிளப்பும் டவுட்!

எம்பிபிஎஸ் அட்மிஷனுக்கு ஆன்லைனில் கவுன்சிலிங்: மருத்துவர் சங்கம் கிளப்பும் டவுட்!



எம்பிபிஎஸ் படிப்பிற்ரான மருத்துவ மாணவர் சேர்க்கை முதன்முதலாக நடைபெறவுள்ள ஆன்லைன் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்தற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அச்சங்கத்தின் பொதுசெயலாளர் ரவீந்தரநாத், 'கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்கள் மற்ற 7 மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதால் அரசிற்கு விருதுகள் கிடைக்கும் நிலையில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்றும் இதுவரை அவர்களுடைய கோரிக்கையோ, ஊதியம் உயர்வோ வழங்கபடவில்லை, எதிர்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை தற்போதைய அரசு நிறைவேற்ற வேண்டும்.

மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் அதே பயிற்சி ஊதியத்தை, ராஜா முத்தையா கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கும் வழங்க பட வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர் அவர்களை மிரட்டும் போக்கை கைவிட்டு கோரிக்கை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கலை, முதுகலை மருத்துவ கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. முதல்முறையாக மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுவதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் உள்ளது.

கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முன்னோட்டத்தை வழங்கி, மாணவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க வேண்டும்' என்று டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad