பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல்? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 21, 2022

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல்? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையா!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல்? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையா!


பொங்கல் புரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, உளுத்தம்பருப்பு உள்ளி்ட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு 1297 கோடி ரூபாய் செலவில், ரேஷன் கடைகள் மூலம் இந்த பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.

பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி செத்து கிடந்ததாகவும், மிளகுக்கு பதிலாக பருத்திக்கொட்டையும், மஞ்சள் தூளில் கோலமாவும் கலந்திருந்ததாக ஆங்காங்கே புகார் எழுந்தன. மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு காலதாமதாக வழங்கப்பட்டதுடன் அவை தரமற்று இருப்பதாகவும் கூறி, அவற்றில் நடுரோட்டில் கொட்டி பயனாளிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், 'பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்று பரிசுத் தொகுப்பு குறித்த புகார்கள் எழ காரணமாக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து சமயம் தமிழுக்கு பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியது:

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறி்த்து இப்போதைக்கு திட்டவட்டமார எதையும் கூற முடியாது. அதேசமயம் இதில் ஊழ்ல் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கதான் செய்கின்றன.

சென்ற தீபாவளி பண்டிகையின்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு தொகுப்பை வழங்க, பொதுத்துறை நிறுவனமான ஆவினை விட்டுவிட்டு, தனியார் நிறுவனத்திடம் அதனை கொள்முத் செய்ய திமுக அரசு முயற்சித்தது. இந்த பிரச்சனை பூதாகரமாகவே பிறகு வழக்கம்போல் ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.









No comments:

Post a Comment

Post Top Ad