மனசாட்சியோட பேசுங்க.. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து சர்சையை கிளப்பிய நடிகர்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு இசையமைப்பாளர் அனிருத்துதான் காரணம் என்று கூறிய நடிகர் பயில்வான் ரங்கநாதனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
குறையாத பேச்சு
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப் போவதாக கடந்த திங்கள் கிழமை இரவு அறிவித்தனர். இதுதொடர்பாக இருவருமே தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஒரே மாதிரியான பதிவை ஷேர் செய்தனர். இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்து நான்கு நாட்கள் ஆகியும் அதுதொடர்பான பேச்சு சமூக வலைதளங்களில் குறைந்த பாடில்லை.
சமாதான பேச்சு
ஒரு பக்கம் பிள்ளைகள் யாருடன் வளருவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில் மறுப்பக்கம் தனுஷ் ஐஸ்வர்யா இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் வேலையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்துக்கு இசையமைப்பாளர் அனிருத்தான் காரணம் என கூறி வாங்கி கட்டி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
அனிருத்துடன் உறவு
தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், திருமணத்திற்கு முன்பே அனிருத்துடன் ஐஸ்வர்யாவுக்கு தவறான உறவு இருந்ததாக கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் அவர்களுக்கு இடையிலான உறவு நீடித்ததாகவும் கூறியுள்ளார்.
கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
இது தனுஷுக்கு பிடிக்காததால் அவர் அனிருத்தை பல முறை எச்சரித்தும் இருவரும் தங்களின் பழக்கத்தை தொடர்ந்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் மனசாட்சியோடு பேசுங்கள் என்று கூறி வருகின்றனர். ஐஸ்வர்யா தனுஷ் திருமணத்தின் போது அனிருத் அவர்களுடன் சிறு பையனாக இருந்த போட்டோவையும் ஷேர் செய்து பயில்வான் ரங்கநாதனை கழுவி ஊற்றி வருகின்றனர்.
என்னா உருட்டு..
ஐஸ்வர்யா - அனிருத் குறித்து பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், என்னென்ன உருட்டு உருட்டுறாரு இந்த பயில்வான் என நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன். பயில்வான் ரங்கநாதன் சினிமாத் துறையில் உள்ளவர்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment