மீண்டும் மோதலில் இறங்கும் சிம்பு..இனி என்டர்டைன்மெண்ட்க்கு பஞ்சம் இருக்காது..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 22, 2022

மீண்டும் மோதலில் இறங்கும் சிம்பு..இனி என்டர்டைன்மெண்ட்க்கு பஞ்சம் இருக்காது..!

மீண்டும் மோதலில் இறங்கும் சிம்பு..இனி என்டர்டைன்மெண்ட்க்கு பஞ்சம் இருக்காது..!


சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஏப்ரல் 14 வெளியாகும் வாய்ப்புள்ளது
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ஆனால் இவர் திறமைக்கு இவர் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என்பது ரசிகர்களின் பொதுவான கருத்து. நடிப்பு, நடனம், பாடல், வசனம், இயக்கம் என அனைத்திலும் பட்டையை கிளப்பும் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

தொடர்ந்து தம்,மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் வெற்றி அவரை முன்னணி நாயகனாக அலங்கரித்தது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாக ஒரு மெகாஹிட் படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் தொடர்வெற்றிக்கான முயற்சியில் சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் தற்போது நடித்துகொண்டுவருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இதர பணிகளை விரைந்து முடித்து படத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

மேலும் படத்தில் சிம்பு ஐந்து விதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து பொங்கலுக்கு வெளியாகவிருந்து பின்பு ஒத்திவைக்கப்பட்ட RRR திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில் விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் 14 வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் ஏப்ரல் 14 வெளியாகும் பட்சத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் மோதும் வாய்ப்பு உருவாகும்.


ஏற்கனவே துப்பாக்கி-போடாபோடி, மாஸ்டர் -ஈஸ்வரன் என விஜய்யுடன் மோதிய சிம்பு தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதவுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad