தாமாக மருந்து கொடுத்த தாய்... பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைய பாருங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

தாமாக மருந்து கொடுத்த தாய்... பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைய பாருங்க!

தாமாக மருந்து கொடுத்த தாய்... பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைய பாருங்க!இரண்டரை மாத பச்சிளம் குழந்தைக்கு குழந்தையின் தாய் தானாகவே மருந்து கொடுத்த நிலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டரை மாத பச்சிளம் குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய் தானாகவே வயிற்று வலிக்கு மருந்து கொடுத்துள்ளார்.

அதனால் குழந்தைக்கு உடல்நிலை மேலும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'பொதுமக்கள் இதுபோன்று' தவறான சிகிச்சை முறைகளை நாங்களே கையாள்வதும், உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வரும் முதியோர்கள். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்களுக்கும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்

உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டவை சட்ட பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதிகபட்சம் அவர்கள் 10 ஆண்டுகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்' என்று மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுக்கு முறையாக மருத்துவம் படித்து பயிற்சி. பெற்ற மருத்துவர்களை அணுகி, அவர்களின் அறிவுரைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மண்டல காவல்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad