நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் 7 உணவுகள்... எப்படி எடுத்துக் கொள்ளலாம்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் 7 உணவுகள்... எப்படி எடுத்துக் கொள்ளலாம்...

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் 7 உணவுகள்... எப்படி எடுத்துக் கொள்ளலாம்...


உயிர் வாழ உதவும் சுவாசத்துக்கு பயன்படும் உறுப்பு தான் நுரையீரல். இதனை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவுகள் என்ன என்று பார்ப்போம் வாங்க.

உடலும், மனதும் சரியாகவும், நன்றாகவும் செயல்படுவதற்கு நுரையீரல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி என்னவெனில், வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதோடு, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மட்டுமே.

​நுரையீரல் ஆரோக்கியம்

ஆரோக்கியமான உணவு மட்டுமே உங்களை எந்த நோயும் தாக்க விடாமல் தடுக்கச் செய்கிறது. இந்தியாவில், காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் சுவாச நோய் சம்மந்தமான பிரச்சனைகளும் அதிக அளவில் உள்ளன.

​சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆளாகும் மக்கள்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி 235 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகின்றனர். நம் நுரையீரல் காற்றை மட்டுமின்றி, காற்றில் உள்ள அழுக்குகள் மற்றும் புகைகளையும் உறிஞ்சுகின்றன.

இதனால் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சிஸ்டிக் பைப்ரோஸிஸ் மற்றும் நிமோனியா போன்ற சுவாசப் பிரச்சனைகளின் அபாயங்கள் அதிகரிக்கும்.

உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினால் சில ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

​ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்று ஆய்வாளர்கள் நிரூப்பித்து உள்ளனர். ஆப்பிளில் நிரம்பியுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சுவாசப் பிரச்சனைகளை தடுக்கச் செய்யும்.

​அக்ரூட் பருப்புகள்

வால்நட் எண்ணப்படும் அக்ரூட் பருப்புகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மிகச் சிறந்த ஆதாரமாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராட முடியும். அதோடு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி நோய்களில் இருந்து உங்களைக் காக்கச் செய்யும்.

​பெர்ரி பழங்கள்

புளுபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த வகை பழங்களில் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அவை சரும செல்களை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும்.

​ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள், போலேட் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்து உள்ளன. அவை நுரையீரலை சேதப்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். ப்ரோக்கோலியில் எல் சல்போராபேன் எனப்படும் பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது சுவாசக் கோளாறுகளைத் தவிர்க்கவும், சுவாச அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது.

​இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்பு இருப்பது மட்டுமின்றி, நச்சுத்தன்மையை நீக்கவும் செய்கிறது. இது நுரையீரலில் உள்ள மாசுகளை நீக்குவதோடு, மூச்சுத்திணறல் அல்லது மூச்சு நெரிசலைப் போக்கவும், நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் சுழற்சியை மேம்படுத்தவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

​பூண்டு

பூண்டில் குளுதாதயோனின் உற்பத்தியைத் தூண்டும் பிளாவனாய்டுகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் புற்றுநோய் செல்களை அகற்ற உதவுவதோடு, உங்கள் நுரையீரலையும் சிறப்பாக செயல்பட வைக்கும்.

​மஞ்சள்

மஞ்சள் கிருமிநாசினியாகவும், அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் உள்ள குர்குமின் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவுடன் தொடர்புடைய நெஞ்சு இறுக்கத்தைப் போக்க உதவுகிறது. மேலும், நுரையீரலில் உள்ள கிருமிகளை அழிக்கவும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad