IND vs SA 2nd Test: ‘நாங்களும் சம்பவம் பண்ணுவோம்’..தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா: அபார வெற்றி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

IND vs SA 2nd Test: ‘நாங்களும் சம்பவம் பண்ணுவோம்’..தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா: அபார வெற்றி!

IND vs SA 2nd Test: ‘நாங்களும் சம்பவம் பண்ணுவோம்’..தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா: அபார வெற்றி!


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.


இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி, ஜோகனஸ்பர்க்கில் துவங்கி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றால், இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துவிடும் என்பதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 202/10 ரன்களை சேர்த்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 50 (133) ரன்களை குவித்து அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது பங்கிற்கு 46 (50) ரன்கள் அடித்தார்.

தென்னாப்பிரிக்க பௌலர் மார்கோ யான்சன் 4/31 விக்கெட்களையும், ரபாடா, ஓலிவியர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்:

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 229/10 ரன்கள் எடுத்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஷர்தூல் தாகூர் 7/61 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஜோகனஸ்பர்க் பிட்சில் இதுதான் இந்திய பௌலரின் சிறந்த பந்துவீச்சாகும்.

இந்தியா 2ஆவதுஇன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே 58 (78), சேத்தேஸ்வர் புஜாரா 53 (86), ஹனுமா விஹாரி 40 (84) போன்றவர்கள் சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் சொதப்பியதால் இந்தியா 266/10 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

ரபாடா, மார்கோ யான்சன், லுங்கி நெகிடி போன்றவர்கள் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

வெற்றி இலக்கை:

இதனைத் தொடர்ந்து, இலக்கைத் துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்கரம் 31 (38), கீகன் பீட்டர்சன் 28 (44) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்.

அடுத்து கேப்டன் டீன் எல்கர் உடம்பில் பலமுறை அடிப்பட்டும் கடைசிவரை நிலைத்து நின்று விளையாடினார். இவருக்கு உறுதுணையாக இருந்த வான் டீர் துஷன் 40 (92) ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். இறுதியில் எல்கர் 96* (188), டெம்பா பவுமா 23 (45) ஆகியோர் வெற்றிக்கு உதவினார்கள். இதனால், தென்னாப்பிரிக்க அணி 243/3 ரன்கள் குவித்து அபார வெற்றியைப் பெற்றது.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற 11ஆம் தேதி, கேப் டவுனில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad